சென்னையை குளிர்வித்த மழை: 2. 30 மணி வரை தொடரும்

83பார்த்தது
சென்னையை குளிர்வித்த மழை: 2. 30 மணி வரை தொடரும்
தமிழ்நாட்டில் வளிமண்டல சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று (ஏப்ரல் 15) அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, அதுமட்டுமின்றி கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி என பல்வேறு வானிலை மாற்றங்கள் காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.

சென்னையில் கோடை வெயில் வாட்டி வந்த நிலையில் திடீர் வானிலை மாற்றம் ஏற்பட்டு இருள் சூழ்ந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. சென்னை எம்.ஆர்.சி. நகர், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. எழும்பூர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, கிண்டி, சைதாப்பேட்டை, பரங்கிமலை, அசோக் நகர், அண்ணா நகர், செனாய் நகர், கீழ்பாக்கம், வேப்பேரி, மதுரவாயல், கோயம்பேடு, வளசரவாக்கம், நெற்குன்றம், கலைஞர் நகர், ஈக்காட்டுத்தாங்கல், மாதவரம், ஆவடி, புழல், தாம்பரம், மேடவாக்கம், வேளச்சேரி, பல்லாவரம், குரோம்பேட்டை, கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

தொடர்புடைய செய்தி