வடசென்னை அனல்மின் நிலையத்தில் உற்பத்தி பாதிப்பு

57பார்த்தது
வடசென்னை அனல்மின் நிலையத்தில் உற்பத்தி பாதிப்பு
மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில் உள்ள வட சென்னை அனல் மின் நிலையத்தில் முதலாவது நிலையில் 3 அலகுகளில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தியும், 2வது நிலையில் 2 அலகுகளில் தலா 600 மெகாவாட் மின் உற்பத்தி என மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், 1வது நிலையின் 1வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. பழுது நீக்கும் பணிகளில் மின் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி