சென்னை திருவொற்றியூரை சேர்ந்த 10வயது சிறுமி, தனது தாய் சமைத்து வைத்த சாப்பாட்டை குப்பை எனக்கூறியதால், சிறுமியின் தான் திட்டியதோடு, தந்தையிடம் கூறுவதாக தெரிவித்துள்ளார்.
இதனால் பயந்து போன சிறுமி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இந்நிலையில் சிறுமி மாயமானதை தொடர்ந்து சிறுமியின் தந்தை அருகில் இருந்த வீடுகளில் தேடியும் கிடைக்காததால், போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர்.
இதைத்தொடர்ந்து அதே பகுதியில் உள்ள திருமண மண்டப வாசலில் தனியாக அழுந்து கொண்டு அமர்ந்திருந்த சிறுமியை வாலிபர் ஒருவர் அழைத்து வந்து வீட்டில் ஒப்படைத்தார். அவருக்கு போலீசார் மற்றும் பொதுமக்கள் கைத்தட்டி பாராட்டு தெரிவித்தனர்.