சென்னை: பொங்கல் பண்டிகை; விமான நிலையத்தில் அலைமோதும் கூட்டம்

80பார்த்தது
சென்னை: பொங்கல் பண்டிகை; விமான நிலையத்தில் அலைமோதும் கூட்டம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை விமானநிலையத்தில் நேற்று (ஜனவரி 11) மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கான விமான டிக்கெட் ஹவுஸ் புல் ஆனது. 

செவ்வாய்க்கிழமை பொங்கல் பண்டிகை என்றாலும், முன்னதாகவே நேற்று முன்தினத்திலிருந்து சொந்த ஊர்களுக்கு மக்கள் புறப்பட்டு சென்றனர். ரயில், பஸ்களில் டிக்கெட் கிடைப்பது அரிதாக உள்ளது. இதைத் தொடர்ந்து பயணிகள், விமானங்களில் ஊர்களுக்கு புறப்பட்டு செல்ல தொடங்கியுள்ளனர். 

வெள்ளிக்கிழமை மாலையில் இருந்து, சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம், அதிகமாக இருக்கிறது. நேற்று உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம், அதைவிட அதிகமாக அலைமோதுகிறது. இதையடுத்து வழக்கம்போல், சென்னை விமான நிலையத்தில், விமான டிக்கெட்டுகளின் கட்டணங்கள் பல மடங்கு, ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளன

தொடர்புடைய செய்தி