சாலை சீரமைக்காத அதிகாரிகள்: பொதுமக்கள் வேதனை

60பார்த்தது
சாலை சீரமைக்காத அதிகாரிகள்: பொதுமக்கள் வேதனை
மேடவாக்கம் அடுத்த சித்தாலப்பாக்கம், இரண்டாவது வார்டு, வள்ளுவர் நகர் முதல் தெருவில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை அமைக்கப்படவில்லை.

வழித்தடம் யாவும் குண்டும் குழியுமாக உள்ளன. சிறு மழை பெய்தாலும், தெரு முழுதும் சகதி படர்ந்து, நடக்கவே லாயக்கற்ற நிலைக்கு மாறுகிறது.

இதனால் சிறியவர் முதல் பெரியவர் வரை, கடும் அவதிப்படுகின்றனர்.

சம்பந்தப்பட்ட துறையினர் கவனித்து, சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி