மேடவாக்கம்: இளம்பெண் இறப்பு; போலீசார் விசாரணை

61பார்த்தது
மேடவாக்கம்: இளம்பெண் இறப்பு; போலீசார் விசாரணை
மேடவாக்கம் அடுத்த பெரும்பாக்கம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்பில், 5வது பிளாக், 21வது வீட்டில் வசிப்பவர் பெங்களூருவைச் சேர்ந்த பைசல், 37. இவரது மனைவி சோனாலி, 24. தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் பைசல், கதவை வெளியே தாழிட்டு வெளியே சென்றார். 

சிறிது நேரம் கழித்து, பக்கத்து வீட்டு பெண்ணிடம் மொபைல் போனில் பேசிய பைசல், மனைவி என்ன செய்கிறார் என பார்க்கச் சொல்லியுள்ளார். இதையடுத்து, அந்தப் பெண், பைசல் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, சோனாலி இறந்த நிலையில் கிடந்துள்ளார். பெரும்பாக்கம் போலீசார், உடலை மீட்டு, கணவர் பைசலைத் தேடி வருகின்றனர். அவர், தன் மனைவியைக் கொலை செய்து, தலைமறைவாகி இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி