தங்கம் பறிமுதல்: விமான நிலைய ஊழியர், பயணி கைது

67பார்த்தது
தங்கம் பறிமுதல்: விமான நிலைய ஊழியர், பயணி கைது
சிங்கப்பூரில் இருந்து பெரிய அளவில் சென்னைக்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக, சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு நேற்றுமுன்தினம் தகவல் கிடைத்தது. அதன்பேரில், சுங்க அதிகாரிகளின் தனிப்படையினர், காலையில் இருந்து, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் அனைத்து விமான பயணிகளையும் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சிங்கப்பூரில் இருந்து, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை, சுங்க அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது, இலங்கையைச் சேர்ந்த 29 வயது ஆண் பயணி ஒருவர் மீது, சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர், சிங்கப்பூரிலிருந்து சென்னை வந்துவிட்டு, டிரான்சிட் பயணியாக, நேற்று காலை 6. 30 மணிக்கு, சென்னையில் இருந்து துபாய் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் பயணிக்க இருந்தார். இப்போது இலங்கை பயணி, தான் வைத்திருந்த ஒரு பார்சலை எடுத்து, இண்டிகோ ஏர்லைன்ஸ் ஊழியர் ஒருவரிடம் ரகசியமாக கொடுத்து, அவரிடம் ஏதோ கூறிக்கொண்டு இருந்தார். இதை கண்காணித்துக் கொண்டிருந்த சுங்க அதிகாரிகள், இண்டிகோ ஏர்லைன்ஸ் ஊழியர் வைத்திருந்த பார்சலை வாங்கி, பிரித்துப் பார்த்தனர். பார்சலுக்குள் தங்க கட்டிகள் இருந்தது தெரிந்தது. உடனடியாக சுங்க அதிகாரிகள் இண்டிகோ ஏர்லைன்ஸ் ஊழியரையும், இலங்கை பயணி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி