சென்னை: போதைப்பொருள் வழக்கில் நடிகர்களை தொடர்ந்து மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் அவரைத் தொடர்ந்து நடிகர் கிருஷ்ணா அடுத்தடுத்து கைதானது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இருவரும் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் போதைப்பொருள் விற்பனை குழுவைச் சேர்ந்த பயாஸ் ஷமேட் என்பவரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்து, அவரிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்துள்ளனர்.