தமிழகத்தில் இன்று வெயில் வாட்டி எடுக்கும் எனக் கூறப்பட்ட நிலையில், அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி காலை 10 மணி வரை ராமநாதபுரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகை, கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், அரியலூர் மற்றும் விழுப்புரத்தில் மிதமான மழை பெய்யும் எனக் கூறப்பட்டுள்ளது