Oct 24, 2024, 05:10 IST/
தமிழகம், தமிழ்நாடு இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்ன?
Oct 24, 2024, 05:10 IST
தமிழகம் - தமிழ் + அகம். இதன் பொருள் தமிழ் அல்லது தமிழர் இருக்கும் இடம் என்பதாகும். ஆனால் ‘தமிழ்நாடு’ என்கிற சொல் சங்கம் மருவிய காலத்திலிருந்து காணப்படுகிறது. குறிப்பாக சிலப்பதிகாரத்தில் சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு ஆகிய நாடுகளை உள்ளடக்கியது தான் தமிழ்நாடு என கூறப்பட்டுள்ளது. நாடு என்ற கருத்துரு உருவாகுவதற்கு முன்னர் அகம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே தமிழகம், தமிழ்நாடு இரண்டும் நாட்டை குறிக்கும் ஒரு சொல்லே ஆகும்.