ஆயிரம் விளக்கு - Thousand lights

சென்னை: காவி உடையில் வள்ளுவர் படம்.. முத்தரசன் கண்டனம்

சென்னை: காவி உடையில் வள்ளுவர் படம்.. முத்தரசன் கண்டனம்

ஆளுநர் ஆர். என். ரவி முதன்மை விருந்தினராக பங்கேற்கும் பன்னாட்டு கருத்தரங்க நிகழ்வின் அழைப்பிதழில், காவியுடை அணிந்து, பூணூல் போட்டு அமர்ந்துள்ள "வள்ளுவர்" படம் அச்சிடப்பட்டுள்ளது. தமிழகத்தின் தொன்மை மரபையும், தனித்துவ பண்பையும் அறியாத ஆர். என். ரவி, தனது மதவெறி சார்ந்த மலிவான அரசியல் அடையாளமாக வள்ளுவரை பயன்படுத்தும் முயற்சியை தமிழகம் ஒருபோதும் ஏற்காது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.  இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆளுநர் மாளிகையில் நடைபெறும் திருவள்ளுவர் - கபீர் தாஸ், யோகி வேமனா - ஆகியோர் தொடர்பாக பன்னாட்டு கருத்தரங்கம் ஒன்று நடைபெறுகிறது. ஆளுநர் ஆர். என். ரவி முதன்மை விருந்தினராக பங்கேற்கும் இந்த நிகழ்வின் அழைப்பிதழில், காவியுடை அணிந்து, பூணூல் போட்டு அமர்ந்துள்ள "வள்ளுவர்" படம் அச்சிடப்பட்டுள்ளது. வள்ளுவர் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழகத்தின் தொன்மை மரபையும், தனித்துவ பண்பையும் அறியாத ஆர். என். ரவி, தனது மதவெறி சார்ந்த மலிவான அரசியல் அடையாளமாக வள்ளுவரை பயன்படுத்தும் முயற்சியை தமிழகம் ஒருபோதும் ஏற்காது. இதுபோன்ற செயல்கள் அவரது ஞான சூன்யத்தையும், அமைதியை சீர்குலைத்து ஆதாயம் தேடும் மலிவான எண்ணத்தையும் வெளிப்படுத்தி வருகிறது. ஆளுநரின் அநாகரிக செயலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

வீடியோஸ்


சென்னை