ஸ்டாலின் தாத்தாவுக்கு நன்றி என அமைச்சர் உதயநிதி
ஸ்டாலின் ஒரு ட்வீட் போட்டிருக்கிறார்.
இதுகுறித்து அமைச்சர் உதயநிதி
ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: சென்னை பெரியமேட்டைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சகோதரர் ராஜீவ்
அவருடைய மகள் ஹர்சினிக்கு ஹீமோபிலியா எனும் நோய் பாதிப்பு இருந்த நிலையில், அவருக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்களின் ஏற்பாட்டில், சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது நம்முடைய கவனத்திற்கு வந்தபோது, சிறுமி ஹர்சினியை சமீபத்தில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தோம். அப்போது, ஹர்சினியின் குடும்பத்தினர், வீடற்ற நிலையில் சாலையோரம் வசிப்பதாகவும், சுகாதாரமான வாழ்வுக்கு அரசு தரப்பில் ஒரு வீடு வழங்க வேண்டுமென்றும் கோரிக்கை வைத்தனர்.
அவர்களின் கோரிக்கையை சம்பந்தப்பட்ட துறைக்கு நாம் அனுப்பி வைத்த நிலையில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சத்தியமூர்த்தி நகர் திட்டப் பகுதியில் ஹர்சினிக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆணையை ஹர்சினியின் குடும்பத்தாரிடம் வழங்கி வாழ்த்தினோம். புதிய இல்லத்தில் தங்கை ஹர்சினியின் கனவுகள் மெய்ப்படட்டும். இவ்வாறு உதயநிதி
ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அது போல் மற்றொரு பதிவில்
ஸ்டாலின் தாத்தாவுக்கு நன்றி என கூறி ஹர்சினியின் வீடியோவையும் உதயநிதி வெளியிட்டிருந்தார்.