சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஒத்திகை

68பார்த்தது
சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஒத்திகை
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் திடீரென தீவிரவாதிகள் விமானத்தை கடத்த முயற்சி செய்தால், அதனை எவ்வாறு முறியடித்து, தீவிரவாதிகளை மடக்கிப் பிடித்து, விமானத்துக்கும், பயணிகளுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்வது என்பது தொடர்பான பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.

இந்த ஒத்திகையின்போது, தீவிரவாத இயக்கங்களைச் சேர்ந்த 4 தீவிரவாதிகள் திடீரென விமான நிலையத்தின் உள் பகுதியில், பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் புகுந்துவிட்டனர். அவர்கள் சென்னையில் இருந்து புறப்பட இருக்கும் ஒரு விமானத்துக்குள் ஊடுருவி, அந்த விமானத்தை நடுவானில் கடத்த திட்டமிட்டுள்ளனர் என்ற ரகசிய தகவல் வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி