சென்னை விமான நிலையத்தில் தெலுங்கு யூடியூபர் சன்னி யாதவை NIA அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது அவர் பாகிஸ்தானில் 2 மாதங்கள் தங்கியிருந்துள்ளார். மேலும், இதுகுறித்து அவர் தனது யூடியூப் சேனலில் வீடியோக்களையும் பதிவேற்றம் செய்திருக்கிறார். 2 மாதங்கள் பாகிஸ்தானில் எங்கு இருந்தார்? பதற்றமான சூழ்நிலையில் அங்கு செல்வதற்கான காரணம் என்ன? என்பது குறித்து அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.