திமுக எம். பி. க்கள் கூட்டத்தில் 6 தீர்மானங்கள்

69பார்த்தது
திமுக எம். பி. க்கள் கூட்டத்தில் 6 தீர்மானங்கள்
திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு. க. ஸ்டாலினுக்கு கோவையில் பாராட்டு விழா நடத்தப்படும், நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும், நாடாளுமன்ற வளாகத்தில் அகற்றப்பட்ட தேசத் தலைவர்கள் சிலைகளை அதே இடத்தில் வைக்க வேண்டும், நிதியுரிமை - மொழியுரிமை உள்ளிட்ட மாநில உரிமைகளுக்காக நாடாளுமன்றத்தில் அயராது குரல் கொடுப்போம் உள்ளிட்ட 6 தீர்மானங்கள் சனிக்கிழமை திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதன் விவரம்:

இந்தியாவே திரும்பிப் பார்க்கும் மாபெரும் வெற்றியைத் தேடித்தந்த மு. க. ஸ்டாலினுக்கு இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நெஞ்சார்ந்த நன்றியையும், பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.

மு. க. ஸ்டாலினுக்கு பாராட்டு விழா ஆகிய மூன்றையும் இணைத்து முப்பெரும் விழாவாக வருகிற ஜூன் 14-ஆம் தேதியன்று கோவையில் கொண்டாடுவது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

நாடாளுமன்றப் பாதுகாப்புப் பணியில், மீண்டும் PSS அணியினர் தொடர்ந்து ஈடுபடுத்திட இந்தக் கூட்டம் வலியுறுத்துகிறது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்புடைய செய்தி