அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் விவிபேட் கருவியை இணைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு விசிக தலைவர் திருமாவளவன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைத் தவறாகப் பயன்படுத்தி மோசடிகள் செய்து, மீண்டும் ஆட்சிக்கு வர பாஜக துடிக்கிறது. கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது, வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி செய்துதான் பாஜக ஆட்சிக்கு வந்ததாகத் தரவுகளோடு வல்லுநர்கள் கூறி வருகின்றனர் என்று தெரிவித்தார்.