தியாகராய நகர் - Thiyagarayanagar

ரூ. 400 கோடி மின்மாற்றி கொள்முதல் ஊழல்: அன்புமணி வலியுறுத்தல்

ரூ. 400 கோடி மின்மாற்றி கொள்முதல் ஊழல்: அன்புமணி வலியுறுத்தல்

மின்மாற்றி கொள்முதலில் அரசுக்கு ரூ. 397 கோடி இழப்பு ஏற்பட்டது குறித்து சிபிஐ விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் இன்று(செப்.27) வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு 2021-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை மின் வாரியத்திற்கு அதிக விலை கொடுத்து 45, 800 மின்மாற்றிகள் வாங்கப்பட்டதில் வாரியத்திற்கு ரூ. 400 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும், அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் தமிழ்நாடு கையூட்டு தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குனரகத்தில் அறப்போர் இயக்கம் புகார் அளித்து ஓராண்டுக்கும் மேலாகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அரசு நிர்வாகத்தை சீரழிக்கும் ஊழல் குறித்த புகார் மீது நடவடிக்கை எடுப்பதில் அரசும், காவல்துறையும் காட்டும் அலட்சியமும், தாமதமும் கண்டிக்கத்தக்கவை. மின்மாற்றி கொள்முதலில் நடந்த முறைகேடுகளில் முதல் எதிரியாக விசாரிக்கப்பட வேண்டியவர் மின்துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி. ஊழல் வழக்கில் சிறை சென்று 471 நாள் சிறைவாசத்திற்குப் பிறகு விடுதலையான அவரை பெருந்தியாகம் செய்தவர் என மு. க. ஸ்டாலின் பாராட்டுகிறார். செந்தில்பாலாஜிக்கு ஆதரவாக அரசு எந்திரமே செயல்படுகிறது. மின்மாற்றி கொள்முதலில் அரசுக்கு ரூ. 397 கோடி இழப்பு ஏற்பட்டது குறித்து சிபிஐ விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

வீடியோஸ்


சென்னை