தியாகராய நகர் - Thiyagarayanagar

ரூ. 400 கோடி மின்மாற்றி கொள்முதல் ஊழல்: அன்புமணி வலியுறுத்தல்

ரூ. 400 கோடி மின்மாற்றி கொள்முதல் ஊழல்: அன்புமணி வலியுறுத்தல்

மின்மாற்றி கொள்முதலில் அரசுக்கு ரூ. 397 கோடி இழப்பு ஏற்பட்டது குறித்து சிபிஐ விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் இன்று(செப்.27) வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு 2021-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை மின் வாரியத்திற்கு அதிக விலை கொடுத்து 45, 800 மின்மாற்றிகள் வாங்கப்பட்டதில் வாரியத்திற்கு ரூ. 400 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும், அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் தமிழ்நாடு கையூட்டு தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குனரகத்தில் அறப்போர் இயக்கம் புகார் அளித்து ஓராண்டுக்கும் மேலாகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அரசு நிர்வாகத்தை சீரழிக்கும் ஊழல் குறித்த புகார் மீது நடவடிக்கை எடுப்பதில் அரசும், காவல்துறையும் காட்டும் அலட்சியமும், தாமதமும் கண்டிக்கத்தக்கவை. மின்மாற்றி கொள்முதலில் நடந்த முறைகேடுகளில் முதல் எதிரியாக விசாரிக்கப்பட வேண்டியவர் மின்துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி. ஊழல் வழக்கில் சிறை சென்று 471 நாள் சிறைவாசத்திற்குப் பிறகு விடுதலையான அவரை பெருந்தியாகம் செய்தவர் என மு. க. ஸ்டாலின் பாராட்டுகிறார். செந்தில்பாலாஜிக்கு ஆதரவாக அரசு எந்திரமே செயல்படுகிறது. மின்மாற்றி கொள்முதலில் அரசுக்கு ரூ. 397 கோடி இழப்பு ஏற்பட்டது குறித்து சிபிஐ விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

வீடியோஸ்


சென்னை
பட்டியலினத்தை சேர்ந்தவருக்கு துணை முதல்வர் பதவி: வானதி
Sep 27, 2024, 15:09 IST/ஆயிரம் விளக்கு
ஆயிரம் விளக்கு

பட்டியலினத்தை சேர்ந்தவருக்கு துணை முதல்வர் பதவி: வானதி

Sep 27, 2024, 15:09 IST
பட்டியலினத்தைச் சேர்ந்தவருக்கு துணை முதல்வர் பதவியை முதல்வர் வழங்க வேண்டும் என பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று(செப்.27) வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் உள்ள திராவிட கட்சிகள் குறிப்பாக, திமுகவின் அரசியல் விசித்திரமானது. கூட்டணி கட்சிகளின் தயவில் வெற்றி பெற்ற பின் திமுக தனித்து ஆட்சி அமைக்கும். 1967-ம் ஆண்டு முதல் கட்சியின் வரலாறு இதுதான். சமூக நீதி பற்றி பேசும் திமுக ஆட்சியில் பட்டியலினத்தவருக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. அமைச்சரவை பட்டியலில் அவர்களுக்கு கடைசி இடம்தான். 2014, 2019 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைத்தும் கூட்டணி கட்சிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில் இடமளித்தார். இவற்றையெல்லாம் உணர்ந்துதான் 'ஆட்சியிலும் பங்கு; அதிகாரத்திலும் பங்கு' என்ற புதிய கோஷத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் முன்வைத்துள்ளார். அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, நியாயமான கேள்வியை எழுப்பியிருக்கிறார். ஆகவே, தமிழக முதல்வர், பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரை துணை முதல்வராக்க வேண்டும். முக்கிய துறைகளில் அமைச்சர் பதவியும் வழங்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.