தியாகராய நகர் - Thiyagarayanagar

செந்தில் பாலாஜி ஜாமீனுக்கு; செல்வப்பெருந்தகை வரவேற்பு

செந்தில் பாலாஜி ஜாமீனுக்கு; செல்வப்பெருந்தகை வரவேற்பு

பாஜகவினருக்கு ஒரு நீதி, எதிர்க்கட்சி கட்சிகளை சேர்ந்த சித்தராமையாவுக்கும், செந்தில் பாலாஜிக்கு ஒரு நீதியா? ஊழலின் ஊற்றுக் கண்ணாக இருக்கிற பாஜகவினரே உங்களது புனிதர் வேடத்தை கலைக்கிற வகையில் தான் உச்ச நீதிமன்றம் இதுபோன்ற தீர்ப்புகளை வழங்கி வருகிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2011 முதல் 2015 ஆம் ஆண்டு வரை போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது, ஊழல் செய்ததாக கூறி 2023-ல் அவர்மீது பழிவாங்கும் நோக்கத்துடன், கூடுதலாக பணபரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைக்கப்பட்டு 471 நாட்களாக சிறைவாசத்தை அனுபவித்து விட்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பினால் விடுதலை செய்யப்பட்டிருப்பதை, தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வரவேற்கிறேன். பாஜகவினருக்கு ஒரு நீதி, எதிர்க்கட்சி கட்சிகளை சேர்ந்த சித்தராமையாவுக்கும், செந்தில் பாலாஜிக்கு ஒரு நீதியா? ஊழலின் ஊற்றுக் கண்ணாக இருக்கிற பாஜகவினரே உங்களது புனிதர் வேடத்தை கலைக்கிற வகையில் தான் உச்ச நீதிமன்றம் இதுபோன்ற தீர்ப்புகளை வழங்கி வருகிறது என்று அவர் கூறியுள்ளார்.

வீடியோஸ்


சென்னை
கடைகளில் போலீசார் சோதனை; குட்கா,கஞ்சா பறிமுதல்
Sep 27, 2024, 02:09 IST/வில்லிவாக்கம்
வில்லிவாக்கம்

கடைகளில் போலீசார் சோதனை; குட்கா,கஞ்சா பறிமுதல்

Sep 27, 2024, 02:09 IST
சென்னையில் குட்கா விற்பனையை கட்டுப்படுத்தும் வகையில், போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில், சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின் பேரில், பள்ளி மற்றும் கல்லூரிகள் அருகே உள்ள கடைகளில் குட்கா பொருட்களை விற்பனை செய்கிறார்களா என்பதை சோதனை நடத்த அந்தந்த காவல் நிலைய போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளார். அதன் அடிப்படையில், சென்னையில் பல்வேறு இடங்களில் போலீசார் நேற்று (செப்.,26)அதிரடி சோதனை நடத்தினர். குறிப்பாக, கீழ்ப்பாக்கம் காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட அயனாவரம் மற்றும் தலைமைச் செயலக காலனி பகுதியில் கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் ரகுபதி உத்தரவின் பேரில், அயனாவரம் உதவி கமிஷனர் முத்துக்குமார் இன்ஸ்பெக்டர்கள் பரணிநாதன், சிவக்குமார் உள்ளிட்டோர் அடங்கிய போலீசார் 2 குழுக்களாக பிரிந்து அயனாவரம் காவல் நிலையம் மற்றும் தலைமைச் செயலக காவல் நிலையம் ஆகிய பகுதிகளில் கடுமையான சோதனை செய்தனர். பள்ளி உள்ள பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டதில் ஆயிரக்கணக்கான கூல் லிப் மற்றும் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த வகையில் தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்துக்கு உட்பட்ட ஓட்டேரி சந்தியப்பன் மெயின் தெருவில் உள்ள ஒரு டீக்கடையில் இருந்து கூல் லிப் உள்ளிட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக, சதீஷ் (30) என்பவர் கைது செய்து, சிறையில் அடைக்கப்பட்டார்.