காமராஜர் ஆட்சி ஏற்பட களம் அமைப்போம்: செல்வப்பெருந்தகை

59பார்த்தது
காமராஜர் ஆட்சி ஏற்பட களம் அமைப்போம்: செல்வப்பெருந்தகை
தமிழகத்தில் அனைவரும் கூட்டு முயற்சி மேற்கொண்டு காமராஜர் ஆட்சி ஏற்பட களம் அமைப்போம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு. செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த கே. எஸ். அழகிரி மாற்றப்பட்டு, மாநிலத் தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள் ளார். அவர் மாநில காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்கும் நிகழ்ச்சி சென்னை சத்தியமூர்த்தி பவனில்நேற்று நடைபெற்றது. இதையொட்டி அண்ணா சாலையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு சத்தியமூர்த்தி பவனை அடைந்தசெல்வப் பெருந்தகை, கட்சியின் மேலிட பார்வையாளர் அஜோய்குமார் முன்னிலையில் பொறுப்பேற்றுக்கொண்டார். முன்னாள் தலைவர் கே. எஸ். அழகிரி பொறுப்புகளை ஒப்படைத்தார். அதனைத் தொடர்ந்து சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை பதவியேற்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.

பின்னர் பேசிய செல்வப்பெருந்தகை, அனைவரும் கூட்டு முயற்சி மேற்கொண்டால் காமராஜர் ஆட்சி கொண்டுவர முடியும். அதற்கு எல்லோரும் சேர்ந்து களம் அமைப்போம் என்று தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி