தமிழக காங். கமிட்டி பொதுக்குழு: 7 தீர்மானங்கள் நிறைவேற்றம்

61பார்த்தது
தமிழக காங். கமிட்டி பொதுக்குழு: 7 தீர்மானங்கள் நிறைவேற்றம்
நாடாளுமன்ற கட்சி தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது உட்பட ஏழு தீர்மானங்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுகுழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுக்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமை தாங்கினார். அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் அஜோய் குமார், அகில இந்திய காங்கிரஸ் தேசிய செயலாளர் சிறிவல்ல் பிரசாத், தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற கட்சி தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது உட்பட ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி