சென்னையில் மாநில உரிமைகள் பாதுகாப்பு சிறப்பு மாநாடு

271பார்த்தது
சென்னையில் மாநில உரிமைகள் பாதுகாப்பு சிறப்பு மாநாடு
இண்டியா கூட்டணி சார்பில் மக்கள் பிரச்சினைகளை வலியுறுத்தி சென்னையில் மாநில உரிமைகள் பாதுகாப்பு சிறப்பு மாநாட்டை நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்று அக்கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் பெ. சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் கே. கனகராஜ் ஆகியோர் இன்று சந்தித்தனர். சென்னையில் மாநில உரிமைகள் பாதுகாப்பு சிறப்பு மாநாட்டை இண்டியா கூட்டணி சார்பில் நடத்த கோரிக்கை வைக்கப்பட்டது. இச்சந்திப்பின் போது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி. கே. எஸ். இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி