விருதுநகரில் மறு வாக்கு எண்ணிக்கை: தேமுதிக புகார்

71பார்த்தது
விருதுநகரில் மறு வாக்கு எண்ணிக்கை: தேமுதிக புகார்
விருதுநகர் வாக்கு எண்ணிக்கை முறைகேடு தொடர்பாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் என்று தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்த பின் தேமுதிக வழக்கறிஞர் ஜனார்த்தனன் தெரிவித்தார்.

விருதுநகர் தேர்தல் முடிவுகள் தொடர்பாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், வாக்கு எண்ணிக்கை இடையில் நிறுத்தி வைக்கப்பட்டது மற்றும் முன்கூட்டியே முதல்வர் தேர்தல் வெற்றி குறித்து பேசியது தொடர்பாகவும் குற்றச்சாட்டுக்களை எழுப்பியுள்ளார். அத்துடன், தேர்தல் ஆணையத்திலும் விருதுநகர் வாக்கு எண்ணிக்கை குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூவை சந்தித்த, தேமுதிக வழக்கறிஞர் ஜனார்த்தனன் புகார் மனுவை அளித்தார்.

தொடர்புடைய செய்தி