துணைவேந்தர் மீதான நடவடிக்கையின் பின்னணியில் பொன்முடி

76பார்த்தது
துணைவேந்தர் மீதான நடவடிக்கையின் பின்னணியில் பொன்முடி
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது முகாந்திரமே இல்லாத ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அமைச்சராக இருந்த பொன்முடி சொல்லிக் கொடுத்துதான் இவையெல்லாம் நடந்திருக்கிறது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், பெரியார் பல்கலை. துணை வேந்தர் PUTER ஒரு பவுண்டேஷனை துவங்குகிறார். ஆனால், இதை ஒரு கம்பெனி துவங்கியதைப் போல மக்களுக்குச் சொல்லிவிட்டனர். உண்மையில் அந்த பவுண்டேஷன் பெயரே, Periyar University Technology Entreprenurship Research Foundation என்பதுதான். பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்படும் ஒரு கம்பெனி, அந்த கம்பெனியின் லாபத்தை யாரும் வெளியே எடுத்துபோக முடியாது. அந்த கம்பெனியின் வளர்ச்சிக்காக மட்டும்தான் அதை பயன்படுத்த வேண்டும்.

தொடர்புடைய செய்தி