எம்ஜிஆர், ஜெயலலிதாவை பின்பற்றுபவர்கள் இனிமேல் மோடியை பின்பற்றி பாஜக பக்கம் வருவார்கள் என பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ. என். எஸ். பிரசாத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பாஜக பெற்றிருக்கும் 11. 24 சதவீத வாக்குகள் என்பது மிகப்பெரிய அரசியல் மாற்றத்திற்கு வித்திடப் போகிறது. எம்ஜிஆர், ஜெயலலிதா என இரு பெரும் தலைவர்களின் வழி வந்தவர்கள், அவர்களை பின்பற்றுபவர்கள் இனி மோடியை பின்பற்றி பாஜக பக்கம் திரும்புவார்கள்.
திமுகவின் தேசிய அணியாக காங்கிரஸ் மாறிவிட்டது. இப்போது அதிமுக திமுகவின் கிளைக் கழகம் போல மாறிக்கொண்டிருக்கிறது. திமுகவை வீழ்த்த வேண்டுமானால் அது பாஜகவால்தான் முடியும் என்கிற நிலையை நோக்கி தமிழக அரசியல் களம் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த மக்களவைத் தேர்தல் உணர்த்தும் உண்மை இதுதான் என்று தெரிவித்துள்ளார்.