கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: ராமதாஸ் வலியுறுத்தல்

77பார்த்தது
கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: ராமதாஸ் வலியுறுத்தல்
கள்ளக்குறிச்சி விஷ சாராயம் வழக்கின் சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

கள்ளக்குறிச்சி பகுதியில் கள்ளச் சாராயம் விற்கப்படுவதற்கு அப்பகுதியைச் சேர்ந்த ஆளும் திமுகவின் நிர்வாகிகளும், சட்டப்பேரவை முன்னாள், தற்போதைய உறுப்பினர்களும் முழு ஆதரவாக இருந்திருக்கின்றனர் என்பது தான் பாமகவின் குற்றச்சாட்டு. இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டால், அனைத்து உண்மைகளும் வெளிவந்துவிடும் என்பதுதான் திமுக அரசின் அச்சம் ஆகும். 

அதனால் தான் இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட மறுத்த தமிழக அரசு, இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சாவு வழக்கில் திமுகவினருக்கு உள்ள தொடர்புகளையும், அதிர்ச்சியூட்டும் உண்மைகளையும் மூடி மறைக்க வேண்டும் என்று திமுக அரசு மேற்கொண்ட முயற்சிக்கு கிடைத்த சம்மட்டி அடி ஆகும். 

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பைத் தொடர்ந்து, விரைவில் தொடங்கப்படவுள்ள சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு அனைத்து வகைகளிலும் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். தமிழகத்திலுள்ள மதுக்கடைகளை மூடி முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி