சின்ன சின்ன குழப்பங்களை சரிசெய்துவிடுவேன்! - அன்புமணி உறுதி

84பார்த்தது
பாமகவைப் போல எந்த கட்சியும் தமிழ்நாட்டில் கிடையாது. நம் லட்சியம், கனவு பாமக தமிழகத்தை ஆள வேண்டும் என்பதே. அதற்கான நேரம் வந்திருக்கிறது. அது நிச்சயமாக நடக்கும். அடுத்தக் கட்டத்துக்கு நாம் செல்ல வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில், இரண்டாவது நாளாக பாமக மாவட்ட நிர்வாகிகள் உடன், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த கூட்டத்தில் தொண்டர்கள் மத்தியில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது, நீங்கள் எவ்வளவு பெரிய பொறுப்புகளில் இருந்தாலும், அந்த வட்டத்தின் செயலாளர்தான் உறுப்பினர் அட்டையைக் கொடுக்க வேண்டும். பாமக நிறுவனர் ராமதாஸ் நம்முடைய குலசாமி, குலதெய்வம். அவர் ஒரு கொள்கை வழிகாட்டி. இந்த கட்சியை அவர்தான் தொடங்கியிருக்கிறார். அவருடைய 45 ஆண்டுகால உழைப்பு, தொலைநோக்கு சிந்தனை, சமூகநீதி உட்பட அனைத்தும் அவர் நமக்கு கற்றுக்கொடுத்தது. அவருடைய கொள்கைகள் அனைத்தையும் நாம் கடைபிடித்து, முன்னேறுவோம், வெற்றி பெறுவோம். அதில் மாற்றுக்கருத்து கிடையாது.

கட்சியில் சின்ன சின்ன குழப்பங்கள் வருகிறது. அதையெல்லாம் சரிபடுத்திவிடுவேன். பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்டு, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டு, உங்களால் தேர்வு செய்யப்பட்ட தலைவன் நான். பாமகவைப் போல எந்த கட்சியும் தமிழ்நாட்டில் கிடையாது என்று அவர் பேசினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி