மெரினாவில் வாகன நிறுத்த கட்டண வசூலில் முன்னாள் ராணுவத்தினர்

579பார்த்தது
மெரினாவில் வாகன நிறுத்த கட்டண வசூலில் முன்னாள் ராணுவத்தினர்
மெரினா, தி. நகரில் வாகன நிறுத்த கட்டண வசூலில் முன்னாள் ராணுவத்தினர்

மெரினா கடற்கரையில் வாகன நிறுத்த கட்டணம் வசூலிக்கும் பணியில் முன்னாள் ராணுவத்தினரை நியமிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி வருவாயை அதிகரிக்கும் பொருட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், ஸ்மார்ட் வாகன நிறுத்தங்களை மெரினா கடற்கரை, பெசன்ட்நகர் கடற்கரை, தியாகராயநகர் உள்ளிட்ட 170-க்கும் மேற்பட்ட இடங்களில் அமைத்துள்ளது. அங்கு நிறுத்தப்படும் வாகனங்களிடமிருந்து கட்டணம் வசூலிக்க ஒப்பந்த அடிப்படையில் டூர்க் மீடியா சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் எஸ்எஸ் டெக் நிறுவனத்துக்கு மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது. இரு சக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ. 5, நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ. 20 கட்டணம் வசூலிக்கவும் மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

விரைவில் கட்டண வசூல் பணியை, அரசு சார்பு நிறுவனமான, தமிழ்நாடு முன்னாள் படைவீரர் கழகம் (TEXCO) மூலமாக மேற்கொள்ள திட்டமிட்டிருக்கிறோம். ஏற்கெனவெ மொத்த வருவாயில் மாநகராட்சிக்கு 55 சதவீதம், ஒப்பந்த நிறுவனத்துக்கு 45 சதவீதம் பகிர்வு அடிப்படையில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக முன்னாள் படைவீரர் கழகத்துடன் விவாதித்து முடிவெடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி