கொருக்குப்பேட்டையில் இலவச கழிவறையை சுற்றி ஆக்கிரமிப்பு

62பார்த்தது
கொருக்குப்பேட்டையில் இலவச கழிவறையை சுற்றி ஆக்கிரமிப்பு
கொருக்குப்பேட்டையில் மாநகராட்சிக்கு சொந்தமான ஆண்/ பெண் இருபாலருக்குமான கட்டணமில்லா கழிவறையை சுற்றிலும், ஆட்டோக்கள் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது. அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கும் ஆட்டோக்களில், எப்போதும் ஓட்டுனர்கள் அமர்ந்திருப்பதாலும், ஆக்கிரமிப்பாலும், பெண்கள் அக்கழிவறையை பயன்படுத்துவது இல்லை. கழிவறை பக்கமுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி