சென்னை: மாநில உரிமைகளை மீட்க உயர் நிலை குழு ஏன்?- முதல்வர் விவரிப்பு

50பார்த்தது
சென்னை: மாநில உரிமைகளை மீட்க உயர் நிலை குழு ஏன்?- முதல்வர் விவரிப்பு
அடுத்தடுத்து மாநிலப் பட்டியலிலுள்ள முக்கிய அதிகாரங்களான மருத்துவம், சட்டம், நிதி ஆகியவற்றை ஒத்திசைவுப் பட்டியலுக்கு மாற்றம் செய்யும் பணிகளே விரைவாக இன்றைய மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் கூறியுள்ளார். 

மாநில உரிமைகளைப் பாதுகாக்க ஓய்வு பெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர் நிலைக் குழு அமைக்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஏப். 15) முதல்வர் மு. க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

முன்னதாக, 110 விதியின் கீழ் இந்த அறிவிப்பை வெளியிட்டு அவர் பேசியது, சமூக நீதி, பொருளாதார ஏற்றத்தாழ்வின்மை, ஒடுக்கப்பட்டோருக்கான வாய்ப்பு ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு, மாநில அரசின் கல்விக் கொள்கையின் அடிப்படையில் மருத்துவக் கல்வியில் தமிழக மாணவர்கள் பங்கேற்பதை உறுதி செய்யும் வண்ணம் இருந்து வந்த நமது கல்விக் கொள்கையினை நீர்த்துப் போகச் செய்து முழுமையாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் 'நீட்' எனும் ஒற்றைத் தேர்வின் வாயிலாக மட்டுமே மருத்துவக் கல்வி இடங்களை நிரப்பும் முறைக்கு மாற்றப்பட்டுவிட்டது. 

சமீபத்தில் தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் உரிமைகளை காக்கும் வகையில் கூட்டாட்சிக் கருத்தியலின் மகத்துவத்தை நாடெங்கும் பரப்பிடும் வகையில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை நாம் பெற்றிருக்கிறோம் என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

தொடர்புடைய செய்தி