சென்னை: மெட்ரோ பணி..திடீரென உள்வாங்கிய வீடு

71பார்த்தது
சென்னை: மெட்ரோ பணி..திடீரென உள்வாங்கிய வீடு
சென்னை தி.நகரில் மெட்ரோ ரயில் பாதை பணிகள் நடைபெறும் நிலையில் லாலா தோட்டம் 2வது தெருவில் உள்ள வீட்டின் தரைப்பகுதி திடீரென உள்ளே சென்றது. நல்வாய்ப்பாக வீட்டில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பள்ளமான பகுதியில் மெட்ரோ பணியாளர்கள் உடனே கான்கீரிட் கொட்டி நிரப்பினார்கள். மெட்ரோ பணி காரணமாக அசம்பாவிதம் ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பார்கள் என அப்பகுதியினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி