டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கை தேவை: ஓபிஎஸ்

68பார்த்தது
டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கை தேவை: ஓபிஎஸ்
கேரளாவில் பரவிவரும் அமீபா தொற்றுநோய், கர்நாடகாவில் பரவிவரும் டெங்கு காய்ச்சல் போன்றவை தமிழகத்தில் பரவாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியல்வாதிகள் படுகொலை, பாலியல் பலாத்காரம், கள்ளச்சாராய மரணங்கள், பட்டாசு ஆலையில் அடிக்கடி நிகழும் வெடி விபத்துகள் மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் என பல அச்சுறுத்தல்களுக்கு இடையே, கேரளாவில் அமீபா தொற்றுநோய் பரவி வருவதும், கர்நாடகாவில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது.

அண்டை மாநிலமான கேரளாவில் மூளையை தின்னும் அமீபா என்னும் தொற்றுநோய் காரணமாக நான்கு பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.

அண்டை மாநிலமான கர்நாடகாவில் டெங்கு காய்ச்சலால் 7, 000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தை ஒட்டியுள்ள பெங்களூருவில் மட்டும் 2, 000 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, டெங்குக் காய்ச்சல் தமிழகத்துக்குள் ஊடுருவாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை திமுக அரசு மேற்கொள்ள வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என்று வலியுறுத்தியுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி