வன்னியர்களுக்கான 10. 5% இட ஒதுக்கீடு தொடர்பாக சட்டம் கொண்டுவர முதலமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலினை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேசிய அவர், வன்னியர்களுக்கான 10. 5 சதவீத இடஒடுக்கீடு சட்டத்தை தமிழக அரசு கொண்டு வருவார்களா? என்பது எங்களுக்கு சந்தேகமாக இருக்கிறது. எனவேதான், இன்று நடைபெறும் இந்தக் கூட்டத்தொடரிலேயே, தமிழக அரசு சட்டம் கொண்டுவர வேண்டும் என முதல்வரை நேரில் சந்தித்து வலியுறுத்தி, அழுத்தம் கொடுத்து வந்துள்ளோம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.