சென்னை - காட்பாடி இடையிலான வந்தே மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டம் ஆக. 3ஆம் தேதி நடைபெறவுள்ளது. குறுகிய தொலைவில் அமைந்திருக்கும் இரு முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. அந்த வகையில், தமிழகத்தின் முதல் வந்தே மெட்ரோ ரயில் சென்னை - காட்பாடி இடையே விரைவில் இயங்கவுள்ளது. ஏசி வசதியுடனான இந்த ரயில்களில் சுமார் 100 நிமிடங்களில் காட்பாடி சென்றடையலாம்.