சென்னை, கிண்டி, மடுவாங்கரை, மசூதி காலனியை சேர்ந்தவர் முருகன். மூன்று சக்கர வாகனத்தில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். நேற்று, ஆதம்பாக்கம் ஏரிக்கரை தெரு, பிருந்தாவன் நகர் சந்திப்பில், வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த இருவர் முருகனிடம் மாமூல் கேட்டு மிரட்டினர். பணம் தர மறுத்ததால், கத்தி முனையில் மிரட்டி, 1,200 ரூபாயை பறித்து சென்றனர். ஆதம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து, வழிப்பறி செய்த, அதே பகுதியை சேர்ந்த மணிமாறன், யோகேஷ் இருவரையும் கைது செய்தனர். ஏற்கனவே இருவரும் 5 வழக்குகளில் தொடர்புடையதும் தெரிய வந்தது. இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.