சென்னை: அவதூறு கருத்து தெரிவித்த முன்னாள் எம்எல்ஏ ராஜுவுக்கு நடிகை த்ரிஷா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இரண்டு தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த ராஜு, த்ரிஷாவின் பெயரைக் கூறி சில கருத்தை முன்வைத்தார். அவரின் பேச்சுக்கு சமூக ஊடகங்களில் எதிர்ப்பு எழுந்த நிலையில், ராஜு தன் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக கூறினார். இந்நிலையில், அவதூறு கருத்தை முன்வைத்த ராஜுவுக்கு, த்ரிஷா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.