டிஎன்பிஎஸ்சி தேர்வை ஒத்தி வைக்க வேண்டும்: அண்ணாமலை

59பார்த்தது
டிஎன்பிஎஸ்சி தேர்வை ஒத்தி வைக்க வேண்டும்: அண்ணாமலை
சென்னை: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) ஒருங்கிணைந்த பொறியாளர் பணிக்கான எழுத்து தேர்வு வரும் ஜனவரி 6, 7 ஆகிய தினங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. துரதிருஷ்டவசமாக, கனமழையாலும் வெள்ளத்தாலும், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய தென்மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டங்களில் இயல்பு நிலை இன்னும் முற்றிலுமாக திரும்பவில்லை. இம்மாவட்டங்களில் உள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்கள், கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். எனவே, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த பொறியாளர் பணிக்கான எழுத்துத் தேர்வையும் மறு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி