அரசியல் கருவியாகும் அமலாக்கத்துறை, ED-ன் அதிகார அத்துமீறலுக்கு இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மோடியின் ஒன்றிய அரசு அமலாக்கத்துறையை எதிர்க்கட்சிகளை மிரட்டவும், உடைக்கவும் பயன்படுத்தி வருகிறது. மூத்த அமைச்சர், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வீட்டில் சோதனை என்ற பெயரில் அதிகார அத்துமீறல் செய்து வருகின்றனர். பாஜகவின் அதிகார அத்துமீறல், எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் வன்மத்தை கண்டிக்கிறோம் என முத்தரசன் கூறியுள்ளார்.