விஜய்யை பார்த்தாலே திமுகவுக்கு பயம்: நயினார் நாகேந்திரன்

56பார்த்தது
விஜய்யை பார்த்தாலே திமுகவுக்கு பயம்: நயினார் நாகேந்திரன்
விஜய்யின் முதல் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெறவுள்ள நிலையில், இதற்கான அனுமதியை தமிழக அரசு இன்னும் வழங்கவில்லை. இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்த பாஜக மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன், விஜய்யை பார்த்து ஆளுங்கட்சி அஞ்சுகிறது எனக் கூறினார். மேலும், அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் அமைந்தால் மிகுந்த மகிழ்ச்சி எனக் கூறிய அவர், விஜயதாரணிக்கு நிச்சயம் பதவி வழங்கப்படும் எனவும் கூறினார்.

தற்போது விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள தி கோட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி