தென் மாநிலங்களில் டெங்கு வேகமாக பரவி வருகிறது. இதில், கர்நாடகாவில் 26, 000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 பேர் இறந்துள்ளனர். இந்நிலையில், கர்நாடகாவை ஒட்டிய தமிழகப் பகுதிகளில் டெங்கு ஒழிப்பு பணியை தீவிரப்படுத்துமாறு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. காய்ச்சல் உள்ளவர்களுக்கு டெங்கு சோதனை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் 4 பேர் டெங்குவுக்கு பலியாகியுள்ளனர்.