சென்னை:
காங்கிரஸ் எம். பி ராகுல்காந்தியை ராவணன் போல் சித்தரித்து போஸ்டர் வெளியிட்ட பாஜகவை கண்டித்து
போராட்டம் நடைபெற்றது.
காங்கிரஸ் எம். பி ராகுலை ராவணன் போல் சித்தரித்து, பா. ஜ. , வின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில், ‘போஸ்டர்’ வெளியிடப்பட்டது.
இதற்கு கண்டனம் தெரிவித்து
காங்கிரஸ் சார்பில் வள்ளூவர் கோட்டத்தில்
போராட்டம் நடைபெற்றது இந்த போராட்டத்திற் கே. எஸ் அழகரி தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசுகையில், ராகுலுக்கு பத்து தலை என, பாஜகவினர் சொல்கின்றனர். நாங்கள் ராகுலுக்கு, 140 கோடி தலை என்று சொல்கிறோம். இந்த முழக்கத்தை நாடு முழுதும் கொண்டு செல்ல வேண்டும்.
இந்து கோவிலுக்கு சொந்தமான ரூ. 5, 000 கோடி மதிப்பிலான சொத்துக்களை, ஆக்கிரமிப்பில் இருந்து, அமைச்சர் சேகர்பாபு மீட்டுள்ளார். இதுவரை ராகுல், ஸ்டாலினை விமர்சித்து வந்த
பிரதமர் மோடி, தற்போது அமைச்சர் சேகர்பாபுவையும் விமர்சிக்க துவங்கி விட்டார் என்றார்.