சென்னை: தடைசெய்யப்பட்ட அமைப்புக்கு ஆள்சேர்த்த புகார்

76பார்த்தது
சென்னை: தடைசெய்யப்பட்ட அமைப்புக்கு ஆள்சேர்த்த புகார்
இந்தியா முழுவதும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு (எல்.டி.டி.இ.,) தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த இயக்கத்திற்கு, ஆள் சேர்க்கும் பணி நடந்து வருவதாக புகார்கள் வந்துள்ளன. இது குறித்து அ.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோவின் முன்னாள் உதவியாளர் பிரசாத்திடம் சென்னை குயின் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை கே.கே. நகரில் உள்ள பிரசாத் வீட்டில் லேப்டாப், செல்போன் உள்ளிட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இலங்கையைச் சேர்ந்த நவநாதன், இலக்கியன் ஆகிய இருவரை மாங்காட்டில் சட்டவிரோதமாக தங்கவைத்துள்ளதாக, பிரசாத் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பிரசாத்திடம் போலீசார் விசாரித்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி