சென்னை: 29 ஆம் தேதி வேலை வாய்ப்பு முகாம்: கலெக்டர் அறிவிப்பு

56பார்த்தது
சென்னை: 29 ஆம் தேதி வேலை வாய்ப்பு முகாம்: கலெக்டர் அறிவிப்பு
சென்னை மாவட்ட கலெக்டர் திருமதி ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிவிப்பு: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் இயங்கும் சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 29ம் தேதி நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடத்தப்பட உள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் 200க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து, இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்தி