சென்னை: இன்று முதல் 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

63பார்த்தது
சென்னை: இன்று முதல் 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு
தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு இசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது.

இதன் காரணமாக இன்று(20-03-2023) முதல் 26-03-2023 வரை 7 நாட்கள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் குறைந்தபட்ச வெப்பநிலை இன்றும் நாளையும் இயல்பை விட 2-3 செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். 

அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2-3 செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம் என வானிலை மையம் கூறியுள்ளது. 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும்(20-03-2023, 21-03-2023) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்தி