சென்னை: மேம்பாலத்தில் பழுதாகி நின்ற பேருந்து

84பார்த்தது
சென்னை: மேம்பாலத்தில் பழுதாகி நின்ற பேருந்து
சென்னை, அயனாவரத்தில் இருந்து நேற்று காலை பெசன்ட் நகர் நோக்கி, '23 சி' என்ற வழித்தட பேருந்து சென்று கொண்டிருந்தது. அண்ணா சாலை மேம்பாலத்தில், காலை 10:00 மணியளவில் சென்றபோது, திடீரென பழுதாகி நின்றது. பேருந்தை தொடர்ந்து வந்த அனைத்து வாகனங்களும் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து நின்றன. 

இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அண்ணாசாலை போக்குவரத்து போலீசார், நெரிசலை சீரமைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பழுதாகி நின்ற மாநகர பேருந்தை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அரை மணி நேரத்திற்குப் பின், அண்ணா சாலையில் போக்குவரத்து சீரானது. மாநகர பேருந்துகள் அடிக்கடி பழுதாகி நடுவழியில் நிற்பது தொடர்கதையாகவுள்ளது. பேருந்தில் உள்ள கண்காணிப்பு கேமரா, அவசர உதவிக்கான சுவிட்சுகளும் பழுதாகி உள்ளன. முறையான பராமரிப்பு இல்லாததே இதற்குக் காரணம். பேருந்துகளின் பராமரிப்பில் மாநகர போக்குவரத்து கழகம் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

தொடர்புடைய செய்தி