பாஜக மாநில மையக்குழு கூட்டம்: அண்ணாமலை பங்கேற்பு

79பார்த்தது
பாஜக மாநில மையக்குழு கூட்டம்: அண்ணாமலை பங்கேற்பு
சென்னை: பாஜகவின் மாநில மைய குழு கூட்டம் நாளை மதியம் நடைபெறுகிறது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில், பஜக தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அநேக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் அக்கட்சி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஒரு பகுதியாக அக்கட்சியின் மாநில மைய குழு கூட்டம் நாளை மதியம் நடைபெறுகிறது. இக்கூட்டத்திற்கு மத்திய பாஜக அமைப்பு இணைச்செயலாளர் சந்தோஷ் தலைமை தாங்குகிறார். கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொள்கிறார். இதில் நாடாளுமன்றத் தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்தி