மெட்ரோ, இயற்கைப் பேரிடர், தொழில் & நகர்ப்புர வளர்ச்சி என எதற்கும் தமிழ்நாட்டுக்கு நிதியில்லை. சுருக்கமாக சொன்னால், மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடே இல்லை என்று உதயநிதி விமர்சித்துள்ளார். தமிழ் - தமிழ்நாடு என பாசாங்கு செய்தவர்களின் முகமூடி தேர்தல் முடிந்ததும் கிழிந்து தொங்குகிறது எனக் கூறிய அவர், மோடியின் பலவீனமான பதவி நாற்காலியின் கால்களுக்கு வலுவூட்டும் பட்ஜெட் என ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.