மூதாட்டியை துண்டு துண்டாக வெட்டிக் கொன்ற தம்பதி

68பார்த்தது
மூதாட்டியை துண்டு துண்டாக வெட்டிக் கொன்ற தம்பதி
சென்னை எம்ஜிஆர் நகர் சேர்ந்தவர் விஜயா வயது 78. இவர் கூலி வேலை செய்து வருபவர். 2 நாட்களாகியும் வேலைக்கு சென்றவர் வீடு திரும்பாததால் மகள் லோகநாயகி போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து விசாரிக்க விஜயாவின் வீட்டில் அருகில் வசித்து வந்த பார்த்திபனை போலீசார் அழைத்த போது, மனைவியுடன் வீட்டை காலி செய்து விட்டு தப்பி ஓடி விட்டார்.

சந்தேகம் அடைந்த போலீசார் கைப்பேசி சிக்னலை வைத்து தேடிய போது, விருதுநகர் அருகில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. விருதுநகர் போலீஸ் உதவியுடன் பார்த்திபன்-சங்கீதா தம்பதியை கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில் தம்பதி மூதாட்டியை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து அடையாற்றில் வீசியது தெரியவந்தது. தம்பதியை சென்னை கொண்டு வந்த பிறகே கொலைக்கான காரணம் தெரியவரும் எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி