ஹிஸ்புல்லா தலைவருக்கு அஞ்சலியா?- இந்து முன்னணி கண்டனம்

68பார்த்தது
ஹிஸ்புல்லா தலைவருக்கு அஞ்சலியா?- இந்து முன்னணி கண்டனம்
தமிழகம் பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், லெபனான் நாட்டில் செயல்படும் பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவனான ஹசன் நஸ்ரல்லா இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட நிலையில், பயங்கரவாதிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சென்னை மிர்சாகிப் பேட்டை பள்ளிவாசல் முன்பு பேனர் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இது கடும் கண்டனத்திற்குரிய செயலாகும்.

மண்டியிட்டு வாழ்வதை விட சத்தியத்திற்காக நிமிர்ந்து நின்று மடிவது மேல் என்ற வாசகங்களுடன் இறந்து போன பயங்கரவாதிக்கு சென்னையில் பேனர் வைத்தவர்கள் யார்? அவர்களது பின்னணி என்ன என்பதைப் பற்றியும் முழுமையாக தமிழக அரசும் உளவுத்துறையும் விசாரிக்க வேண்டும். அவர்களுக்கு ஆதரவாக யார் பேசினாலும் அவர்களையும் கைது செய்ய வேண்டும்.

இனி இது போன்ற பயங்கரவாத ஆதரவு சம்பவங்கள் தமிழகத்தில் நடைபெறாமல் இருக்க தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி பேரியக்கம் கேட்டுக் கொள்கிறது என வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி