சென்னை: மாணவர் கற்றல் நிலை தேசிய சராசரியைவிட சிறப்பு

57பார்த்தது
சென்னை: மாணவர் கற்றல் நிலை தேசிய சராசரியைவிட சிறப்பு
தேசிய சராசரியைவிட தமிழகத்தில் 3, 5, 8-ம் வகுப்பு மாணவர்களின் கல்வித் தரம் சிறப்பாக உள்ளதாக மாநில திட்டக் குழு மற்றும் பள்ளிக்கல்வித் துறை இணைந்து நடத்திய கற்றல் அடைவு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் திறனை அளவிடுவதற்காக அவ்வப்போது 'ஸ்லாஸ்' எனும் மாநில கற்றல் அடைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதை முன்வைத்து ஆளுநர் ஆர்.என். ரவியும் கருத்து தெரிவித்ததால் இந்த விவகாரம் சர்ச்சையானது. 

இதையடுத்து பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை முழுமையாக ஆராய்வதற்காக பிரத்யேக ஆய்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டது. இதற்காக ஏற்கெனவே நடத்திவரும் 'ஸ்லாஸ்' தேர்வை மாநிலத் திட்டக்குழுவுடன் இணைந்து விரிவாக மாநிலம் முழுவதும் உள்ள 45,924 அரசு, அரசு உதவி பள்ளிகளிலும் நடத்த முடிவானது. அதன்படி நடப்பாண்டு 3, 5, 8-ம் வகுப்பு பயிலும் 15.78 லட்சம் மாணவர்களில் 9 லட்சத்து 80,341 (66%) பேர்களிடம் ஸ்லாஸ் தேர்வு பிப்ரவரி 4 முதல் 6-ம் தேதி வரை நடத்தப்பட்டது. 

இந்த ஆய்வுத் தரவுகளின்படி தயாரிக்கப்பட்ட மாநில அளவிலான கற்றல் அடைவுத்தேர்வு-2025 எனும் தொகுப்பறிக்கையை முதல்வர் மு.க. ஸ்டாலினிடம், மாநிலத் திட்டக்குழுவின் செயல் துணைத் தலைவர் ஜெ. ஜெயரஞ்சன் சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று சமர்பித்தார்.

தொடர்புடைய செய்தி